அம்பாறை மாவட்டத்தின் வீரமுனைக் கிராமம் விடுதலைப் புலிகளின் ஆதரவு நிலைப்பாட்டில் தீவிரமாக செயற்பட்ட கிராமங்களில் ஒன்றாகும். அம்பாறை மாவட்டத்தில் இருந்து விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் வீரமுனை மற்றும் அதன் அயல்கிராமங்களைச் சேர்ந்தவர்களாகவே இருந்தார்கள். அதன் காரணமாக இந்தக் கிராம மக்களுக்கு புலிகளின் பாரிய பின்புலம் மற்றும் உடனடி உதவிகள் என்பன தாராளமாக கிடைத்து வந்தது.

அதன் காரணமாக வீரமுனை கிராமத்தைச்சேர்ந்த சில இளைஞர்கள் புலிகளின் செல்வாக்கைப் பயன்படுத்தி அடாவடிகளிலும் ஈடுபட்டனர். சம்மாந்துறை விவசாயிகள் தங்கள் அறுவடைகளை வீரமுனை ஊடாக கொண்டு வரும் சந்தர்ப்பங்களில் இந்த அடாவடி இளைஞர் குழு அவர்களை வழிமறித்து கொள்ளையடிக்கும் செயற்பாடுகளையும் மேற்கொண்டிருந்தது.புலிகளின் உதவி கொண்டு முஸ்லிம்களை அடக்கியாளவும் அவர்களின் சொத்துக்களை கொள்ளையடிக்கவும் உரிமைகளை பறிக்கவும் இவ்வாறான குழுக்கள் தீவிரமாக செயற்பட்டுக் கொண்டிருந்தனர். முஸ்லிம் விரோதப் போக்கு நிலைப்பாட்டில் இருந்த புலிகளும் அவ்வாறான செயற்பாடுகளை ஆதரித்து ஊக்குவித்தார்கள்.

அத்துடன் இங்குள்ள இளைஞர்களில் சிலர் அக்கம் பக்கத்தில் இருந்த முஸ்லிம் சிங்கள யுவதிகளை கடத்தி வந்து புலிகளின் ஆதரவுடன் கட்டாயத் திருமணம் செய்து கொண்ட நிகழ்வுகளும் அந்தக் காலத்தில் நடைபெற்றிருந்தது. புலிகளும் அவ்வாறான இளைஞர்களை தனியாக ஊக்குவித்தார்கள். அந்த இளைஞர்களால் கடத்தப்பட்டு கட்டாயத்தின் பேரில் அவர்களுக்கு வாழ்க்கைப்படும் பெண்களைக் கொண்டு தங்கள் உறுப்பினர்களுக்கு சிங்கள, முஸ்லிம்பெயர்களில் அடையாள அட்டை எடுத்துக் கொள்ளல் போன்ற பல்வேறு செயற்பாடுகளுக்கு அவர்களையும் அவர்களின் கணவர்மாரையும் பயன்படுத்திக்கொள்வது புலிகளின் நீண்ட கால இலக்காக இருந்த்து.

இவ்வாறான பின்புலம் மற்றும் ஊக்குவிப்புகள் காரணமாகவே 89ம் ஆண்டின் மே மாதம் 17ம் திகதி வீரமுனை இளைஞர்கள் ஒன்று சேர்ந்து சம்மாந்துறை நகரத்தையே சூறையாடி, கொள்ளையடித்தார்கள்.. சம்மாந்துறை நகரத்தை ஒட்டுமொத்தமாக கொள்ளையடித்தது போதாது என்று அங்கு நிகழ்த்திய கோரத் தாண்டவம் காரணமாக சுமார் 150 கோடி சொத்துக்கள் ஒரே இரவில் கொள்ளையடிக்கப்பட்டது. 50க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டனர்.
(இவற்றுக்கான ஆதாரங்களுடன் சாம்பலாக்கப்பட்ட சம்மாந்துறை தொடர்பாக தனியான கட்டுரை ஒன்று விரைவில் பதியப்படும்)

வீரமுனை இளைஞர்களுக்கு புலிகள் அளித்த இவ்வாறான பின்புல உதவி மற்றும் துணிச்சல் காரணமாக அங்குள்ள இளைஞர்களும் வன்முறைகளின் மீது நாட்டம் கொண்டவர்களாகவே இருந்தார்கள். சுருக்கமாக சொல்வதாக இருந்தால் வீரமுனை கிராமத்தில் அமைந்திருந்த சிந்தாயாத்திரை கோயில் புலிகளின் ஒரு மினி முகாமாகவே செயற்பட்டது. ராணுவத்தினர் வரும் வேளைகளில் ஒளிந்துகொள்வதற்கும் ராணுவத்தினர் வரும் தகவலை மணி அடித்து அறிவிப்பதற்கும் புலிகள் சிந்தாயாத்திரை கோயிலை முழுமையாக பயன்படுத்திக் கொண்டனர். ஆலய பரிபாலனசபை தலைவர் தம்பிமுத்து சின்னத்துரை புலிகளின் உத்தியோகப்பற்றற்ற பிரதேச தலைவர் போன்றே செயற்பட்டார்.

அம்பாறை மாவட்டத்தின் புலிகளின் அன்றைய முக்கிய பிரதேச தலைவர்களான அண்டனி, மதன் போன்றவர்கள் மட்டுமன்றி மிக முக்கிய தலைவரான கேஷியர் என்பவரும் இங்கு அடிக்கடி வந்து போய்க் கொண்டிருந்தார்கள்.

இந்தக் கேஷியர் என்பவர்தான் லாஹுகலையில் முஸ்லிம் பொதுமக்கள் கோரமாக சிதைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தலைமை தாங்கியிருந்தார். அத்துடன் பொத்துவில் அருகே கோமாரி எனுமிடத்தில் நடுக்கடலில் பயணித்துக்கொண்டிருந்த பலகை ஏற்றிய கப்பல் ஒன்றைக்கொள்ளையடித்து அம்பாறையில் பல இடங்களிலும் விற்பனை செய்திருந்தார். அந்தக் கொள்ளையின் மூலம் அக்காலத்தில் புலிகள் இயக்கம் 30 மில்லியன் ரூபா வை வருமானமாகப் பெற்றுக் கொண்டதாக கூறப்படுகின்றது. அத்துடன் இரண்டாம் கட்ட ஈழப்போரின் ஆரம்பத்தில் 600 பொலிசாரை கொடூரமாக கொலைசெய்த அணியின் தலை வராகவும் இதே கேஷியர் தான் செயற்பட்டிருந்தார். பண்டாரதூவ படுகொலைகளும் இவரது தலைமையில் தான் நடைபெற்றிருந்த்து.

இவ்வாறான முக்கியமான தலைவர்களின் ஆதரவும் ஊக்குவிப்பும் கிடைக்கப் பெற்றிருந்த காரணத்தினால் புலிகளும் அவர்களின் ஆதரவுபெற்ற வன்முறைக் கும்பலும் அக்கம் பக்கத்தில் இருந்த சிங்கள, முஸ்லிம் கிராமங்களை சீண்டிப் பார்ப்பது, கொள்ளையடிப்பது, ரத்தவெறி தலைக்கேறினால் எதிர்ப்படும் ஏனைய இன மக்களை கொன்றொழிப்பது என்று அவர்கள் தங்கள் அராஜகங்களை கட்டவிழ்த்து விட்டிருந்தார்கள்.

1985ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் திகதி அம்பாறையின் அரந்தலாவை எனுமிடத்தில் சிங்களக் கிராமவாசிகள் 07 பேரை படுகொலை செய்தும் அவர்களின் 40 வீடுகளை தீக்கிரையாக்கியும் சிங்கள மக்களுக்கு எதிரான தங்கள் நரமாமிச வேட்டையை புலிகள் அம்பாறையில் ஆரம்பித்து வைத்திருந்தார்கள்.

இந்திய – இலங்கை ஒப்பந்தத்துக்கு சில மாதங்களுக்கு முன்னர் 1987ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 07ம் திகதி புலிகள் மீண்டும் அரந்தலாவையில் தங்கள் நரமாமிச வேட்டையை கட்டவிழ்த்து விட்டிருந்தார்கள். இந்தத் தடவை பெண்கள், குழந்தைகள் என்று சிவிலியன்கள் 28பேர் வரையில் புலிகளினால் வாள், கத்திகளால் வெட்டியும் கொத்தியும் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

அதே ஆண்டின் ஜூன் மாதம் 02ம் திகதி தான் உலகையே உலுக்கிய 32 இளம் பிக்குகளின் படுகொலைச் சம்பவம் புலிகளினால் அரந்தலாவையில் நடத்தி முடிக்கப்பட்டது. பேரூந்து ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த இளம் பிக்குகள் 32 பேர் கொடூரமான முறையில் வெட்டியும் கொத்தியும் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பின்னரும் சிங்கள மக்களுக்கு எதிரான அராஜகம் ஓயவில்லை. 1987ம் ஆண்டின் அக்டோபர் 06ம் திகதி மட்டக்களப்பு தாராவியில் வசித்த சிங்களவர்கள் 25பேர் முன்னைய பாணியில் வெட்டியும் கொத்தியும் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இந்த்த் தாக்குதலில் பங்கெடுத்த 100பேர் வரையிலான புலிகளின் அங்கத்தவர்களில் 30க்கும் மேற்பட்டவர்கள் வீரமுனை மற்றும் அயல் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் என்பதை ராணுவ உளவுத் தகவல்கள் உறுதிப்படுத்தியிருந்தன.

தாக்குதலில் தன் உறவுகளை பலிகொடுத்து உயிர் தப்பிய சமன் என்ற இளைஞன் பின்னாளில் விசேட அதிரடிப்படை சப் இன்ஸ்பெக்டராக அதன் புலனாய்வுப் பிரிவில் இணைந்து கொள்கின்றான். தமிழ்மொழியில் அவனுக்கு இருந்த பாண்டித்தியமும் புலனாய்வுத் துறையில் இணைந்துகொள்ள அவனுக்கு உறுதுணையாக இருந்தது. தன் ஊரையும் உறவுகளையும் அழித்த வீரமுனைக் கிராமத்தில் இருந்த வந்த புலிகளைத்தேடி அவன் 1989ம் ஆண்டுகளின் இறுதியில் அம்பாறைக்கே வந்து விடுகின்றான். அவனைப்போன்றே அவனின் உறவுக்காரனும் தாராவி சம்பவத்தில் தன் உறவுகளை இழந்தவனுமான அத்தநாயக்க என்பவன் ரிசர்வ் பொலிஸ் கான்ஸ்டபிள் பதவியில் இணைந்துகொள்கின்றான்.

இதற்கிடையே இந்திய – இலங்கை ஒப்பந்தம் காரணமாக ராணுவம் மற்றும் அதிரடிப்படையினர் முகாம்களுக்குள் முடங்கிக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது. அதனை வாய்ப்பாக பயன்படுத்தி 1987ம் ஆண்டு ஒக்டோபர் 07ம் திகதி பொத்துவில் மொனராகலை பிரதான பாதையில் பயணித்துக் கொண்டிருந்த பேரூந்து ஒன்றை வழிமறித்த புலிகள் அதில் பயணம் செய்த சிங்களவர்கள் 25பேரை துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்கின்றனர். பாதையில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த 05 பேரும் இந்தச் சம்பவத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தனர்.

1987ம் ஆண்டின் ஒக்டோபர் மாதம் 10ம் திகதி கந்தலாவையில் 10 சிங்களவர்கள் கூரிய ஆயுதங்களினால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். மூன்று பேர் படுகாயமடைந்திருந்தனர்.

1988ம் ஆண்டின் மார்ச் மாதம் தீகவாபியில் வைத்து தமண பிரதேசத்தின் 13 சிங்கள பொதுமக்கள் புலிகளினால் வெட்டியும் கொத்தியும் படுகொலை செய்யப்படுகின்றனர். இதில் உயிர் தப்பிய ஒரே நபரான மின்சாரசபை சாரதி ரஞ்சித் என்பவர் கொடுத்த வாக்குமூலத்தில் தங்கள் மீதான தாக்குதல்களை மேற்கொண்டவர்களில் பெரும்பாலானவர்களை தான் வீரமுனைக் கிராமத்தில் கண்டிருப்பதாக தெரிவிக்கின்றார். இவர் உகணை பண்டாரதூவ பிரதேசத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தமணைப் பிரதேச பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டிருந்தார்.

அதே ஆண்டின் செப்டம்பர் பத்தாம் திகதி செண்ட்ரல் கேம்ப் பிரதேசத்தில் 16வது கொலனியில் ஏழு சிங்களவர்கள் புலிகளினால் துப்பாக்கிச் சூடு நடத்திப் படுகொலை செய்யப்படுகின்றனர். அவர்களில் சிலர் தமிழ்பெண்களை மணந்திருந்த நிலையில் அதற்கு உதவியாக இருந்த நான்கு தமிழர்களும் சிங்களவர்களுடன் சேர்த்து சுட்டுக் கொல்லப்படுகின்றனர்.

இவ்வாறாக இந்தியப்படை இருந்த வரை ஆட்டம் போட்டுக்கொண்டிருந்த விடுதலைப் புலிகள் 1990ம் ஆண்டு சமாதான பேச்சுவார்த்தையின் பேரால் அன்றைய ஜனாதிபதி பிரேமதாசவை நம்பவைத்து இந்தியப் படையினரை திருப்பி அனுப்புவதில் வெற்றி கண்டிருந்தனர். 1990ம் ஆண்டின் மார்ச் 31ம் திகதியுடன் இந்திய அமைதி காக்கும் படையினர் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இதன் பின்னர் 1990ம் ஆண்டு ஜூன் மாதம் 11ம் திகதி கிழக்கில் கடமையாற்றிய 800 பொலிசாரை புலிகள் பிரேமதாச ஆதரவுடன் கைதுசெய்திருந்தனர். இவர்களில் 200 தமிழ் பொலிசார் விடுவிக்கப்பட்டனர். எஞ்சிய 200 சிங்களப்பொலிசார் மற்றும் 400 முஸ்லிம் பொலிசார் திருக்கோயில் பிரதேசத்தில் வைத்து புலிகளினால் இயந்திரத் துப்பாக்கிகளால் சுடப்பட்டு பெற்றோல் ஊற்றிக் கொளுத்தப்பட்டனர்.

அவ்வாறு கைது செய்யப்பட்ட பொலிசாரை திருக்கோயில் வரை வாகனங்களில் ஏற்றிச்செல்லவும், அவர்களை எரிப்பதற்கான எரிபொருளை வாங்கி வரவும் புலிகளுக்கு வீரமுனை மற்றும் திராய்க்கேணி பிரதேச தமிழ் இளைஞர்களே பெருமளவில் உதவி செய்திருந்தனர்.

அத்துடன் 11ம் திகதி கடத்திச் செல்லப்பட்டு கண்கள் கட்டப்பட்டிருந்த பொலிசார் ரூபஸ்குளத்தின் அருகில் தங்கவேலாயுதபுரம் பாடசாலையில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். மறுநாள் அவர்களின் கண்கட்டுகளை அவிழ்க்கவும் அவர்களுக்கு தேநீர் மற்றும் ஒரு நேர உணவு பங்கிடவும் இதே இளைஞர்களை புலிகள் பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள். அந்தப் பொலிசார் இனி திரும்பி வரப்போவதில்லை என்ற நினைப்பில் குறித்த இளைஞர்கள் தங்கள் முகங்களை மறைக்காமல் தைரியமாக அவர்களின் முன்பாக நடமாடித்திருந்தனர்.

அதன் பின்னர் ரூபஸ்குளத்தில் பொலிசார் கொல்லப்பட்டதன் பின்னர் சடலங்களை அப்புறப்படுத்தும் செயற்பாடுகளும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த்து.

அப்பிரதேசங்களில் இருந்து புலிகளின் மகளிர் போராளிகளாக இணைந்திருந்தவர்கள் இந்தப் படுகொலைகளை நேரடியாக பார்த்து ரசித்துக் கொண்டு கை தட்டி தங்கள் சகாக்களை ஊக்குவித்துக் கொண்டிருந்தனர். புலிகளின் பிரதேச பொறுப்பாளர் ரீகனுடன் கேஷியரும் இவற்றுக்கு தலைமை தாங்கியிருந்தார். இதனை இச்சம்பவத்தில் உயிர் தப்பிய சப் இன்ஸ்பெக்டர் பியரத்ன மற்றும் விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவின் லதீப் ஆகியோர் உறுதிப்படுத்தியிருந்தனர்.

இவ்வாறு புலிகளால்கோரமாக கொலை செய்யப்பட்ட பொலிசாரில் மட்டக்களப்பு தாராவியில் உயிர் தப்பி தன் ரிசர்வ் பொலிஸ் கான்ஸ்டபிளாக இணைந்து கொண்ட அத்தநாயக்கவும் ஒருவராவார். தன் குடும்பத்தை அநியாயமாக கொலை செய்தவர்களை பழிவாங்கும் நோக்குடன் பொலிசில் இணைந்துகொண்டிருந்த அவருக்கு அதற்கான வாய்ப்பு கிட்டாமலே கொடூர மரணம் இழுத்துச் சென்றுவிட்டது. இது கேள்விப்பட்ட சமன் தேம்பித்தேம்பி அழுகின்றான். உயிர்தப்பிய புலனாய்வுப் பிரிவின் லதீபை தேடிச்சென்று தாக்குதலில் பங்கெடுத்த புலிகளின் அடையாளங்கள் மற்றும் காதில் விழுந்த பெயர்களையும் ஏனைய தகவல்களையும் பெற்றுக் கொள்கின்றான்.

இதற்கிடையே ஜூன் 15ம் திகதி கல்முனையில் வைத்து 15 ராணுவத்தினரை கொலை செய்யும் புலிகள் அவர்களின் சடலங்களை சிதைத்து ஆனந்தம் கொள்கின்றனர்.

இதனையடுத்து இனியும் பொறுத்திருக்கு படைத் தரப்பு தயாராக இல்லாத நிலையில் புலிகளுக்கு எதிரானவேட்டை ஆரம்பமாகின்றது. அதிரடிப் படையில் எதற்கும் அஞ்சாநெஞ்சன்கள் என்று பேர் எடுத்திருந்த சமன் மற்றும் லதீப் இதற்கான பொறுப்பினை ஏற்று அம்பாறையின் கல்முனை, சம்மாந்துறை, வீரமுனை திருக்கோயில் பிரதேசங்களில் பொது மக்களுடன் கலந்து மறைந்து வாழ்ந்துகொண்டிருந்த புலிகளின் உறுப்பினர்களை கைதுசெய்யும் நடவடிக்கைகளை ஆரம்பிக்கின்றனர்.

ஜூன் 18ம் திகதி வீரமுனையில் வைத்து 13 புலிகள் விசேட அதிரடிப் படையின் திடீர் பாய்ச்சலின்போது கைது செய்யப்படுகின்றனர்.

20ம் திகதி சிந்தாயாத்திரை கோயிலுக்குள் பதுங்கியிருந்த நிலையில் சிறப்புப் பயிற்சி பெற்றிருந்த மேலும் 13 புலிகள் கைது செய்யப்படுகின்றனர். இவர்கள் உடற்பயிற்சிகளின் மூலம் கட்டுமஸ்தான உடல் வாகைப் பெற்றிருந்ததை ஏற்றுக்கொள்ளும் கிராம மக்கள் அந்த இளைஞர்கள் புலிகள் என்பதை மறைக்கத் தலைப்படுகின்றனர்.

ஆனால் எந்தவொரு ஜிம் வசதியும் இல்லாத அந்த ஊரில் அவர்கள் அவ்வாறான கட்டுமஸ்தான உடலை பெறுவதற்கான வாய்ப்பு எவ்வாறு கிடைத்த்து என்று வினவினால் மௌனம் சாதித்திருந்தனர்.

ஜூன் 29ம் திகதி ஒரு தொகை புலிகளும் (56 பேர் என்று கிராமத்தவர்களின் வாக்குமூலம் குறிப்பிடுகின்றது. ஆனால் 30 வரையான புலிகள் என்று அதிரடிப்படை தெரிவித்திருந்தது. ) கைது செய்யப்பட்டிருந்தனர்.

அதன் பின்னர் ஜூலை 04ம் திகதி மற்றும் 08ம் திகதிகளில் விசேட அதிரடிப்படையினரால் வீரமுனைக்கிராமம் முற்றாக சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் மேற்கொள்ளப்படுகின்றது. இதன்போது 08 பேர் கைதுசெய்யப்படுகின்றனர்.
(http://www.uthr.org/SpecialReports/spreport3.htm…)

இவ்வாறான நிலையில் அதிரடிப்படையினரின் கவனத்தை திசை திருப்ப புலிகள் உகணையில் உள்ள பண்டாரதூவ எனும் சிங்கள கிராமத்தை அழிக்கத் திட்டமிடுகின்றனர்.

ஆகஸ்ட் 07ம் திகதி வீரமுனை, திராய்க்கேணி, கொண்டைவெட்டுவான் போன்ற இடங்களைச் சேர்ந்த புலிகளின் உறுப்பினர்கள் 40பேர் பண்டாரதூவ கிராமத்திற்குள் கத்தி வாள்கள் சகிதம் மாலை 6.30 அளவில் உட்புகுந்தவர்கள் நள்ளிரவு வரை கோரத்தாண்டவம் ஆடியிருந்தனர். புலிகள் வருவதைக் கண்டு ஓடித் தப்ப முயன்ற ஞானவதி டீச்சரின் கழுத்தில் வெட்டிக்கொண்ற புலிகள் அவர் இறுக அணைத்துக் கொண்டிருந்த பிறந்து இரண்டு மாதமே ஆகியிருந்த செவ்வந்தி சந்திமா என்ற பச்சிளம் பாலகியின் வயிற்றுப் பகுதியில் வாள்களால் வெட்டி இரண்டு துண்டுகளாக்கி படுகொலை செய்திருந்தனர்.

1988ம் ஆண்டின் மார்ச் மாதம் தீகவாபியில் வைத்து புலிகளின் தாக்குதலின்போது தெய்வாதீனமாக உயிர் தப்பிக்கொண்டிருந்த ரஞ்சித், தன் பிறந்த ஊருக்கு வந்திருந்த நிலையில் இம்முறையும் புலிகளின் தாக்குதல்களிலிருந்து தப்பித்துக் கொண்டார். அதேநேரம் கொலையாளிகளில் பெரும்பாலானவர்களை அடையாளம் கண்டுகொண்டார்.

பண்டாரதூவ கிராம மக்கள் இந்திய அமைதிப்படை காலத்தில் புலிகளுக்கு ஏராளம் உதவிகளை செய்திருந்தார்கள். இந்தியப் படையின் தாக்குதல்களிலிருந்து தப்பித்துக்கொள்ள புலிகள் பண்டாரதூவை கிராமத்தின் பலகல மலைத்தொடர் அருகே மறைவிடம் ஒன்றைக்கொண்டிருந்த போதிலும் கடைசி வரை அந்தக் கிராம மக்கள் அதனை இந்திய அமைதிப் படையினருக்கு காட்டிக் கொடுக்கவில்லை.

ஏனெனில் அங்குள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்களுடன் திருமண உறவுகளைக் கொண்டிருந்தார்கள். அப்படிப்பட்ட மக்களுக்கு புலிகள் செய்த கைமாறுதான் அவர்களின் கிராமத்தை முற்றாக நிர்மூலம் செய்து 32 பேரைக் கொன்றொழித்த படு பாதகச் செயலாகும். அதில் ஐந்துபேர் சிறுவர்கள். பத்துக்கும் மேற்பட்டோர் பெண்கள்.

இந்தப் படுகொலையில் ஈடுபட்ட புலிகள் தலைவர்கள் தவிர்ந்த சாதாரண உறுப்பினர்கள் வழக்கம் போன்று வீரமுனையில் வந்து மறைந்து ஓய்வெடுக்கத் தொடங்கினார்கள். அடுத்து மீண்டுமொரு தடவை சம்மாந்துறையை சாம்பலாக்குவது அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த கட்டளையாகும். அதற்கான தருணம் வரும் வரை அவர்கள் காத்திருந்தார்கள்.

அதேநேரம் வீரமுனை இளைஞர் ஒருவரால் சம்மாந்துறைப் பிரதேச முஸ்லிம் யுவதி ( நயிலா என்ற பெயர் என்று நினைக்கின்றேன்) ஒருவர் சில நாட்களுக்கு முன்னர் கடத்திச்செல்லப்பட்டு கட்டாயத் திரு மணம் முடித்துக்கொள்ளப்பட்டிருந்த்து. அந்த யுவதியின் குடும்பத்தினர் புலிகளின் அச்சுறுத்தல்களையும் மீறி வீரமுனைக்குள் நுழைந்து அச்சுறுத்தல் விடுத்திருந்தனர்.

இதன் காரணமாக சம்மாந்துறையை மீண்டும் சாம்பலாக்கும் தமது ஒப்பரேசனில் அந்த யுவதியின் குடும்பத்தினரையும் சாம்பலாக்கிவிட புலிகள் காத்திருந்தனர். ஆனால் இறைவன் அவர்களின் அட்டூழியங்களை தாங்கிக்கொள்ள முடியாமல் கோயிலுக்குள் வைத்தே ஓடித் தப்பித்துக்கொள்ள முடியாத நிலையில் பீதியில் நடுங்கி, உடல் சிறுநீரால் தெப்பலாக நனையும் அளவுக்கு அச்சம் கலந்த மரணத்தை அவர்களுக்கு வழங்கியிருந்தான்.

பண்டாரதூவை கிராமத்தில் நடந்த படுகொலைகள் தொடர்பான விசாரணைகளில் கொலையாளிகள் வீரமுனை மற்றும் அயல் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்ற தகவலுடன் கொலையாளிகளை அடையாளம் கண்ட ரஞ்சித் என்ற மின்சார சபையின் சாரதியும் மல்வத்தை ரேடியோ சிலோன் முகாமுக்கு கையளிக்கப்படுகின்றனர். விசாரணை தீவிரமாக்கப்பட்டு புலிகள் வீரமுனைக்குள் பதுங்கி இருக்கும் தகவல் உறுதிப்படுத்தப்படுகின்றது. அத்துடன் அவர்களை விட்டு வைத்தால் அப்பிரதேசத்தில் சிங்கள, முஸ்லிம் இனஅழிப்பு தொடர்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் புலனாய்வுப் பிரிவின் தகவல்கள் எச்சரிக்கை செய்திருந்தன.

இதனையடுத்து ஆகஸ்ட் 12ம் திகதி வீர முனை சுற்றிவளைக்கப்படுகின்றது. ஆனாலும் கோயில் மணி எச்சரிக்கை ஓசை காரணமாக புலிகள் தப்பிச்செல்லத் தொடங்குகின்றனர். இதன்போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தின்போது 13பேர் கொல்லப்படுகின்றனர். புலிகள் தப்பியோட உதவிசெய்துகொண்டிருந்த ஆலய பரிபாலனசபை தலைவர் தம்பிமுத்து சின்னத்துரையும் கொல்லப்படுகின்றார்.
அன்றைய தினம் மொத்த மே 13 பேர் மட்டு மே கொல்லப்பட்டனர். புலிகளும் பின்னாளில் கிராமத்தவர்களும் கூறுவதைப்போன்று 400பேர் என்பதெல்லாம் கப்சா. இதை நான் உறுதிப்படுத்திக்கொள்ளப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் தான் பதிவிடுகின்றேன்.

அதேநேரம் புலிகளுக்கு உதவிய சந்தேகத்தின்பேரில் 55 இளைஞர்கள் கைது செய்யப்படுகின்றனர். பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். எனினும் அவர்கள் திரும்பி வந்தபோது கிராமத்தவர்கள் அங்கி ருந்து இடம்பெயர்ந்து வேறிடங்களில் அகதி முகாம்களை நாடிப்போயிருந்த நிலையில் தங்கள் சொந்தங்களை கண்டுபிடித்துக் கொள்ள அவர்கள் எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. அத்துடன் தாங்கள் மீண்டும் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் அவர்கள் புலிகள் அமைப்பில் போய் இணைந்துகொண்டார்கள்.

அன்றைய தினம் கைதுசெய்யப்பட்ட தனது மகன் விடுதலை செய்யப்பட்டதை கணபதிபுரம், மல்வத்தை-04 ஐச்சேர்ந்த எஸ் இலட்சுமி என்பவர் பின்னாளில் இதுதொடர்பான விசாரணையொன்றுக்கு தன் கைப்பட எழுதி சமர்ப்பித்த கடிதம் உறுதிப்படுத்துகின்றது.
(http://memorymap.lk/index.php/display/singleMemoryView/247)
அத்துடன் அன்றைய தினம் 55-60பேர் மட்டுமே கைதுசெய்யப்பட்டார்கள் என்பதை அவர் தன் கையெழுத்தில் குறிப்பிட்டுள்ளதுடன், தற்போது கூறப்படுவதுபோன்று 400பேர் வரையான படு கொலை குறித்து ஒரு வார்த்தை தானும் குறிப்பிடவில்லை. அதன் மூலம் குறித்த எண்ணிக்கை புலிகளினால் மிகைப்படுத்தப்பட்ட ஒரு பிரச்சாரம் என்பது உறுதியாகின்றது.

மேலும் அவர் எந்தவொரு இடத்திலும் முஸ்லிம்கள் இதில் சம்பந்தப்பட்டிருந்ததாக குறிப்பிடவும் இல்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

அந்த வகையில் புலிகளும் தமிழ் கடும்போக்காளர்களும் நீண்ட காலமாக குற்றம் சாட்டுவதுபோன்று இந்தச் சம்பவங்களில் எந்தவொரு முஸ்லிமும் தொடர்பு பட்டிருக்கவில்லை. கோயிலுக்குள் தாங்கள் பதுங்கியிருந்த்தை மறைத்துக் கொள்ளவும் பண்டாரதூவ மற்றும் காத்தான்குடி, ஏறாவூர் படு கொலைகள் தொடர்பான சர்வதேச அபகீர்த்தியை திசை திருப்பவும் வீரமுனையில் 400 வரையான தமிழர்கள் படுகொலைசெய்யப்பட்டதாக புலிகள் பிரச்சாரம் ஒன்றை கட்டவிழ்த்து விட்டனர்.

ஆனாலும் பண்டாரதூவ படுகொலைகளின் பதிலடியாகவே வீரமுனையில் 13 புலி உறுப்பினர்கள் சுற்றி வளைக்கப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பதே உணமையாகும்.

பின்குறிப்பு- தன் உறவினர்கள் உயிரிழந்த இடத்துக்கு அஞ்சலி செலுத்தச் சென்று திரும்பி வந்து கொண்டிருக் கையில் சமன் புலிகளின் கண்ணி வெடித்தாக்குதலில் கொல்லப்பட்டார்.

ம‌ட்ட‌க்கள‌ப்பு மாவ‌ட்ட‌த்‌தி‌ல் தாரா‌வி பகு‌தி‌யி‌ல் உ‌ள்ள பெ‌ரியவடவா‌ன் எ‌ன்ற இட‌‌த்‌தி‌‌ல் 2008.08.05ம் திகதி (செ‌வ்வா‌ய்‌க் ‌கிழமை) மாலை 6.30 மணியளவில் புலிகளின் கண்ணி வெடித்தாக்குதலுக்கு இலக்காகி இவரும் இன்னும் 23 பேரும் கொல்லப்பட்டனர். சம்பவத்தில் 04 பேர் காயமடைந்திருந்தனர்

Ashroffali Fareed